டெல்லியில் இந்த ஆண்டு ஜூன் 30-க்குள் 8 ஆள் கடத்தல் வழக்கு பதிவாகியுள்ளது. கிழக்கு டெல்லியின் ஷாகர்பூர் பகுதியில் ஒரு குழந்தையை கடத்த முயன்ற சம்பவம் இதனை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. பைக்கில் வந்து குழந்தையை கடத்த முயன்ற இருவரிடம் தாயும், உறவினர்களும் போராடி குழந்தையை மீட்டனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் டெல்லியில் நடைபெற்ற ஆள் கடத்தல் குற்றங்களை ஆராய்ந்தால் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன. ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 38 பேர் வரையும், குறைந்தபட்சமாக 15 பேர் வரையும் கடத்தப்பட்டுள்ளனர்.
2011ஆம் ஆண்டு 25 பேர் பணத்துக்காக கடத்தப்பட்டுள்ளனர். அதன்பிறகான ஆண்டுகளின் விவரம் பின்வருமாறு
- 2012 - 21 நபர்கள்
- 2013 - 30 நபர்கள்
- 2014 - 38 நபர்கள்
- 2015 - 36 நபர்கள்
- 2016 - 23 நபர்கள்
- 2017 - 16 நபர்கள்
- 2018 - 19 நபர்கள்
- 2019 - 15 நபர்கள்
2020 ஜூன் 30ஆம் தேதிக்குள் இதுவரை 8 ஆள் கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலே கொடுக்கப்பட்டுள்ள அத்தனையும் பதிவான வழக்குகள் மட்டுமே. இவையனைத்தும் பணத்துக்காக நடத்தப்படும் ஆள் கடத்தல் ஆகும். ஷாகர்பூர் பகுதியில் குழந்தையை கடத்த முயன்ற சம்பவத்தில், குழந்தையின் மாமாதான் இந்த செயலை செய்தது என காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பல வழக்குகளில் குற்றவாளிகள் சிக்கவே இல்லை. கரோனா அச்சம் ஒருபுறமிருக்க, மீண்டும் ஆள் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது.