ETV Bharat / bharat

உத்தரப் பிரதேசத்தில் கடத்தப்பட்ட சிறுவன்: கடப்பாவில் மீட்பு! - ஆந்திரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம் மாநிலம் படோஹி மாவட்டத்தில் பாரிஷ்பூர் ரயில் நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி நக்ஷத்ரா என்ற சிறுவனை, அவரது தந்தை அழைத்ததாகக் கூறி இருவர் அழைத்துச்சென்று காரில் கடத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிய அச்சிறுவனை ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவரது தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர்.

up
up
author img

By

Published : Dec 9, 2020, 10:26 AM IST

கடப்பா (ஆந்திரப் பிரதேசம்): உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை, சென்னை-கடப்பா சுற்றுச்சாலை வழியாக காரில் கடத்திச் செல்லப்பட்டான். கடத்தியவர்களிடமிருந்து தப்பிய அந்தச் சிறுவன் கடப்பா ரயில் நிலைய பாதுகாப்புப் படையினர் உதவியுடன் அவரது தந்தையிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தில் டிச. 01ஆம் தேதி நக்ஷத்ரா என்ற சிறுவன் பாரிஷ் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தான். அப்போது அங்குவந்த இருவர் அவரது தந்தை அழைப்பதாகக் கூறி சிறுவனை வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது திடீரென அவர்கள் இருவரும் சிறுவனை வலுக்கட்டாயமாக ஒரு காரின் உள்ளே அமரவைத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இதற்கிடையில் சிறுவனுக்கு சாப்பிடுவதற்கு உணவு ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதைச் சாப்பிட்ட சிறுவன் மயக்கம் அடைந்துள்ளான். இந்நிலையில் திடீரென்று சிறுவன் கண்விழித்து பார்த்துபோது, வாகனம் ஒரு இடத்தில் நின்றதைப் பார்த்தான். கடத்தல்காரர்கள் இருவரும் ஒரு கடையில் தேநீர் குடிக்கச் சென்றதைக் கண்ட சிறுவன், அங்கிருந்து தப்பிச்சென்று கடப்பா ரயில் நிலையத்தை அடைந்தான்.

இதையடுத்து நடந்த சம்பவங்கள் குறித்து சிறுவன், அங்கிருந்த ரயில் நிலைய பாதுகாப்புப் படையினரான எஸ்ஐ சங்கர் ராவிடம் தெரிவித்தான். தொடர்ந்து நக்ஷத்ராவின் ஆதார எண்ணை வைத்து, உத்தரப் பிரதேசத்தில் அவரது தந்தை கிருஷ்ணா குமார் துபேரை தொடர்புகொண்டார்.

தகவலறிந்து சிறுவனின் தந்தை நேற்று (டிச. 08) கடப்பா வந்தடைந்தார். மேலும் தனது மகன் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக பல காவல் நிலையங்களில் புகார் தெரிவித்துள்ளதாகக் கூறினார். தனது மகனை மீட்டுக் கொடுத்த காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்ததையடுத்து, அவர்கள் இருவரும் உத்தரப் பிரதேசத்திற்குத் திரும்பிச் சென்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் நடந்துசென்றவர் கால்வாயில் விழுந்து மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.