ETV Bharat / bharat

கேரள மாணவருக்கு கரோனா வைரஸ்!

திருவனந்தபுரம்: கரோனா வைரஸ் தொற்றுநோயால் கேரள மாணவர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.

corona Virus, கொரோனா வைரஸ்
corona Virus
author img

By

Published : Jan 30, 2020, 4:30 PM IST

Updated : Mar 17, 2020, 5:19 PM IST

சீனா, சில உலக நாடுகளில் பரவிவரும் கரோனா நோய் தற்போது இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது. அதன்படி, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தற்போது உறுதிபடுத்தியுள்ளது.

இந்த மாணவர் சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தில் படித்துவருவதாகவும், அவர் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : கரோனா வைரஸ்: திரிபுரா நபர் மலேசியாவில் உயிரிழந்த சோகம்

உலகை அச்சுறுத்திவரும் இந்தப் புதிய கரோனா வைரஸ், சீனாவின் ஹூபே மாகாணம் வுஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் பரவ ஆரம்பித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த நோயால் இதுவரை சீனாவில் மட்டும் 170 உயிரிழந்துள்ளதாகவும், ஏழாயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பயணிகள் பரிசோதிக்கப்பட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க :​​​​​​ கரோனா வைரஸ் தாக்குதல் - தற்காத்துக் கொள்வது எப்படி?

Last Updated : Mar 17, 2020, 5:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.