கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வியாழக்கிழமை (ஜூன்25) செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறுகையில், “தென் மாநிலங்களில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
ஆகவே பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். தங்களின் பயண விவரங்கள் பற்றி தகவல்களை சேகரித்து அதனை குறித்துக்கொள்ள வேண்டும்.
அந்தக் குறிப்பில் பயணம் செய்த இடங்கள், பயணம் செய்த வாகனம், வாகன எண், நேரம், பார்வையிட்ட ஹோட்டல் அல்லது கடைகளின் பெயர் உள்ளிட்ட தகவல்களையும் குறிப்பெடுத்து கொள்ள வேண்டும்.
இது கரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்புகளை கண்டறிய உதவும். ஜூன் 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை, “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் மாநிலத்துக்குள் 154 விமானங்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு விமான நிலையத்திலும் கோவிட்-19 பரிசோதனை நடத்துவதற்கான கருவிகள் உள்பட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நோய்த்தொற்று கண்டறியப்பட்டால் அவர்களுக்கு பிசிஆர் சோதனை நடத்தப்படும். மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
கேரளத்தில் தற்போது 7ஆவது நாளாக தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
இதையும் படிங்க: இந்திய-திபெத் எல்லை படையில் மேலும் 8 பேருக்கு கரோனா பாதிப்பு!