ETV Bharat / bharat

கேரள தங்கக் கடத்தல் வழக்கு : சிவசங்கருக்கு நெருக்கடி அதிகரிக்கிறது.

கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எம். சிவசங்கருக்கும் அவரது ஆடிட்டர் பி. வேணுகோபாலுக்கும் இடையிலான உரையாடல்கள், சிவசங்கர் அமலாக்க இயக்குநரகத்திற்கு அளித்த அறிக்கையின் முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.

Sivasankar
Sivasankar
author img

By

Published : Oct 27, 2020, 5:05 AM IST

கொச்சி (கேரளா): ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரில் கேரளாவிற்கு 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் கேரள முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கருக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரை மாநில அரசு பணி நீக்கம் செய்தது.

இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட துறைகள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் முன்னாள் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கருக்கும் அவரது ஆடிட்டர் பி.வேணுகோபாலுக்கும் இடையிலான உரையாடல்கள், சிவசங்கர் அமலாக்க இயக்குநரகத்திற்கு அளித்த அறிக்கையின் முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.

கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்புடை வழக்கிற்காக, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், இவர்கள் இருவருக்கும் இடையிலான வாட்ஸ்-அப் உரையாடல்கள் அமலாக்க இயக்குனரகத்தால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வழக்கின் சாட்சிகளில் வேணுகோபாலும் ஒருவர்.

முன்னதாக, அமலாக்க இயக்குனரகத்தில், தனக்கு எந்த ஒரு நிதி பரிவர்த்தனை பற்றி தெரியாது என்றும், தான் எந்தவொரு நிதி பரிவர்த்தனையிலும் தலையிடவில்லை என்றும் சிவசங்கர் தெரிவித்திருந்தார். ஆனால், இவர்கள் இருவருக்குமான உரையாடலில், நிதி பரிவர்த்தனைகள் குறித்து சிவசங்கர் அறிந்திருந்தார் என்றும், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் வேணுகோபால் ஆகியோர் வங்கியில் கூட்டாக லாக்கர் திறந்து, லைஃப் மிஷன் ஒப்பந்தத்தில் இருந்து பெறப்பட்ட நிதி மற்றும் கடத்தல் தங்கம் ஆகியவைகளை அதில் டெபாசிட் செய்யதனர் என்பது தெரியவந்ததுள்ளது.

இருவருக்கும் இடையேயான வாட்ஸ் அப் உரையாடல் ஒன்றில், சிவசங்கர், வேணுகோபாலை அமைதியாக இருக்கவும், தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான சர்ச்சைகளில் ஊடகங்களைத் தவிர்ப்பதற்கு, நகரத்திலிருந்து வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல் ஆக., 1ம் தேதி, சிவசங்கர் எல்லாம் சரியாக இருக்கிறதா எனக் கேட்டு வேணுகோபாலுக்கு செய்தி அனுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த வேணுகோபால், வெளியான செய்திகளின் அடிப்படையில், எனது கூட்டாளி என்னிடம் கேட்டதற்கு, நான் உண்மைகளைச் சொன்னேன். எனது மூத்த கூட்டாளிக்கு முழு உண்மைகளையும் முழுமையாக விளக்கினேன். என்ஐஏவிடம் சொன்னதை தான், சுங்கதுறையினர், எனது மூத்த கூட்டாளி, மனைவி, ஊழியர்களிடம் சொன்னேன் என பதிலளித்துள்ளார்.

சிவசங்கர் ஆக., 4ம் தேதி மீண்டும் அனுப்பிய செய்திக்கு பதிலளித்துள்ள வேணுகோபால், இரண்டு நாள்களாக நான் வீட்டிதான் இருக்கிறேன். ஊடகத்தினர் என்னைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதற்கு, சிவசங்கர், அமைதியாக இருங்கள்" என்று கூறியிருக்கிறார்.

இந்த விஷயத்தை விசாரிக்கும் ஏஜென்சிகளால், சிவசங்கரின் நிதி பரிவர்த்தனைகள் ஆராயப்படும் என்று, யாரோ அவருக்கு அறிவுறுத்தியது இந்த உரையாடல்கள் மூலம் தெரியவருகின்றது. சிவசங்கர் ஜூலை 21 ஆம் தேதி வேணுகோபாலுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, தனது நிதி ஆவணங்களைத் தயாரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்பு கேரள உயர் நீதிமன்றத்தில் தங்கக் கடத்தலின் உண்மையான பயனாளி சிவசங்கர் என்று நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக பொருளாதார குற்றங்கள் கண்காணிப்புக் குழு ஆவணங்கள் சமர்ப்பித்திருந்து.

இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீர் கோயில்களைப் பாதுகாக்கும் இஸ்லாமியர்கள்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.