ETV Bharat / bharat

தங்கக் கடத்தல் விவகாரம்: விசாரணையை தீவிரப்படுத்தும் என்ஐஏ

திருவனந்தபுரம்: பட்டூரில் அமைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) துணைத் தூதரகத்தின் அலுவலகத்தில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அலுவலர்கள் குழு ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வு செய்தது.

தங்க கடத்தல் விவகாரம்: விசாரணையை தீவிரப்படுத்தும் என்ஐஏ

author img

By

Published : Jul 21, 2020, 6:45 AM IST

கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக திருவனந்தபுரத்தின் பட்டூரில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்தின் அலுவலகத்தில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அலுவலர்கள் நேற்று முன்தினம் (ஜூலை 19) ஆய்வு மேற்கொண்டனர். ஜூலை 18ஆம் தேதி, என்.ஐ.ஏ குழு தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை ஆதாரங்கள் சேகரிப்பதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள அவர்களது குடியிருப்புகளுக்கு அழைத்துச் சென்றது. அவர்கள் தற்போது என்.ஐ.ஏ.வின் காவலில் உள்ளனர்.

கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ தலைமையகத்தில், கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலர் எம்.சிவாஷங்கரிடம் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட் துணைத் தூதரகத்தில் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கேரள காவல்துறை அலுவலர் ஜெயா கோஷ் ஜூலை 16 ஆம் தேதி மாயமானார். மறுநாள் அவர், தனது வீட்டின் அருகே வெட்டுக்காயங்களுடன் மயக்க நிலையில் கண்டறியப்பட்டார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள். இப்போது அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத நபர்களால் கோஷ் அச்சுறுத்தப்பட்டதால் அவர் பாதுகாப்பற்று இருப்பதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர். இந்த மாத தொடக்கத்தில் ஸ்வப்னா, கோஷிடம் சில முறை பேசியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் துணைத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் பி.எஸ்.சரித் ஜூலை ஐந்தாம் தேதி சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டபோது, ​​14.82 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை ராஜதந்திர சாமான்களில் துபாயிலிருந்து திருவனந்தபுரத்திற்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், மாநில தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவருமான ஸ்வப்னா சுரேஷின் பெயர் வெளிவந்தபோது மாநில அரசிற்கு நெருக்கடி அதிகரித்தது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொருவர் பைசல் ஃபரீதிற்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்குமாறு என்.ஐ.ஏ இன்டர்போலைக் கோரியுள்ளது. முன்னதாக, கொச்சியில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் ஃபரீதிற்கு எதிராக பிணை இல்லா வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.