ETV Bharat / bharat

'தகவல் பறிமாற்ற மோசடியின் முதல் குற்றவாளி பினராயி விஜயன்' - காங்கிரஸ்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து அமெரிக்காவிலுள்ள சந்தைப்படுத்துதல் நிறுவனத்திற்கு வழங்கியதாக கேரள முதலமைச்சர் மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

author img

By

Published : Apr 16, 2020, 5:07 PM IST

kerala-cm-is-first-accused-in-data-fraud-case-congress

இதுகுறித்து கேரள எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதலா கூறியதாவது, கேரள அரசு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கும் பணியினை அமெரிக்காவை தலைமையிடமாகக்கொண்ட ஸ்பிரிக்கிள் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமையைப் பறிக்கும் செயல் எனவும் வணிக நோக்கங்களுடன் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அளித்த பணியினை அரசு நிறுவனங்களுக்கே அளித்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

இந்த தகவல்கள் எப்போது வேண்டுமானாலும் தவறான முறையில் பயன்படுத்தப்படலாம் எனவும், அவ்வாறு நிகழ்ந்தால் தகவல் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்ட முதல் நபராக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இருப்பார் எனவும் தெரிவித்தார்.

இந்த வெளிநாட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்யவேண்டும் எனவும் ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தியுள்ளார். மேலும், இது குறித்து கேரள அரசு உரிய விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் கூறினார்.

2018ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பிலிருந்தே இந்நிறுவனம் கேரள மாநிலத்தில் பணிபுரிந்து வருவதாக மாநில அரசு விளக்கமளித்திருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச சந்தையில் தரவுகள் பரிமாற்றத்திற்கான மதிப்பு 700 கோடி ரூபாய் வரையிலும் உயரக்கூடும் எனவும், கேரள அரசாங்கத்தில் தரவுகள் சேமிப்பில் இந்த நிறுவனத்தின் பங்குகள் என்ன என்பதையும் தெரியப்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 'நாங்கள் பிழைத்துக் கொள்வோம்’ - உலகின் முன் பெருமிதம் கொள்ளும் கேரளம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.