கேரள மாநிலம், கோலஞ்சேரி பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர், வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டம் விட்ட மூன்று குடிபெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டிற்குள் நுழைந்து கூர்மையான ஆயுதங்களால் பலமாகத் தாக்கியுள்ளனர். இதையடுத்து, மூவரும் மூதாட்டியிடம் கூட்டு பாலியல் வன்புணர்விலும் ஈடுபட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மூவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர், பலத்த காயமடைத்த மூதாட்டி அருகிலிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் மூவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், "இச்சம்பவம் நடைபெற்ற போது மூன்று பேரும் மது அருந்தியுள்ளது உறுதியானது. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். மேலும், மூதாட்டியின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதா குறித்தும் விசாரணை நடைபெறுகிறது" என்றார்.