ETV Bharat / bharat

'ராணுவத்திலிருந்து மருத்துவர்கள், செவிலியர் தேவை' - அமித் ஷாவுக்கு கெஜ்ரிவால் கடிதம் - டெல்லி மாநில செய்திகள்

டெல்லி: தெற்கு டெல்லியில் புதிதாக அமையவுள்ள கோவிட் கேர் சென்டருக்கு இந்திய-திபெத்திய எல்லைக் காவல் துறை (ஐ.டி.பி.பி.), ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர் ஆகியோர் தேவை எனக் கோரி டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்துறை அமைச்சர் அமித் ஷாக்குக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

kejriwal-writes-to-shah-seeking-doctors-and-nurses-from-itbp-army-to-run-10000-bed-covid-facility

author img

By

Published : Jun 23, 2020, 10:44 PM IST

டெல்லியில் நாளுக்குநாள் கரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இப்பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் மாநிலத்தில் போதுமான மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதுமட்டுமின்றி மாநிலத்தில் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதனை ஈடுகட்டும் வகையில் தெற்கு டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ்பி என்ற அமைப்பின் வளாகத்தில் 10 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் கேர் சென்டர் அமையவுள்ளது. இதற்குச் சேவைபுரிய இந்திய-திபெத்திய எல்லைக் காவல் துறை (ஐ.டி.பி.பி.), ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர் ஆகியோர் தேவை எனக் கோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், இந்தப் புதிய கோவிட் கேர் சென்டர் அமைக்கப்பட்டபிறகு, அதனைப் பார்வையிட அமித் ஷாவுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார். தற்போது 1,700 கடி உயரத்திலும் 700 அடி அகலத்திலும் புதிய கோவிட் கேர் சென்டர் முழுமையாக இம்மாத இறுதியில் அமையவுள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய கோவிட் கேர் சென்டராக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, ஜூலை மாத இறுதியில் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 5.5 லட்சத்தை எட்டும் என்றும், அவர்களுக்குச் சிகிச்சையளிக்க 80 ஆயிரம் படுக்கை வசதிகள் தேவைப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

டெல்லியில் இதுவரை 62 ஆயிரத்து 655 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 ஆயிரத்து 233 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 36 ஆயிரத்து 602 பேர் இத்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.