ETV Bharat / bharat

கெஜ்ரிவாலின் 10 வாக்குறுதிகள் - உயர்மட்ட அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை! - டெல்லி சட்டப்பேரவை தேர்தல்

டெல்லி: தேர்தலின்போது ஆம் ஆத்மி முன்வைத்த 10 வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து உயர்மட்ட அலுவலர்களுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Kejriwal
Kejriwal
author img

By

Published : Feb 18, 2020, 7:35 PM IST

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரையில் 62 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது. இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக, டெல்லி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தல் பரப்புரையின்போது தடையற்ற மின்சாரம், குப்பை இல்லாத டெல்லி, 24 மணி நேரமும் குடிநீர் வசதி உள்ளிட்ட 10 வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி முன்வைத்தது. சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி பெருவாரியான வெற்றியைப் பெற, இந்த வாக்குறுதிகளும் முக்கிய காரணம் என்பது அரசியில் நிபுணர்களின் கருத்து.

இந்நிலையில், ஆம் ஆத்மி தனது வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உயர்மட்ட அலுவலர்களுடன் வரும் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

புதன்கிழமை, முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த முதன்மை செயலர்களும் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல புதன்கிழமை, டெல்லி அமைச்சரவைக் கூட்டமும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சந்திரபாபு நாயுடுவின் ‘ இசட் பிளஸ் ’ பாதுகாப்பு குறைப்பு - தெலுங்கு தேசம் கட்சி கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.