மத்திய அரசால் காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அமைச்சர்கள் அங்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, கத்ரா, பந்தல் ஆகிய பகுதிகளில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதேபோல், மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஸ்ரீநகருக்குச் சென்றார். இந்நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாரமுல்லா மாவட்டத்திற்குச் சென்று மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தார். அப்போது அவர், "ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ள மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
தோட்டக்கலை, சுற்றுலா போன்ற துறைகள் மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்படும். அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவை மூலம் நாட்டின் எதிர்காலத்தை மாற்ற நேரம் வந்துள்ளது. பூமியின் சொர்க்கமாக காஷ்மீர் விளங்குகிறது. அதனை பாதுகாக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் 73, 74 ஆகிய சட்டத் திருத்தங்கள் அமல்படுத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ’ஜெகன்மோகன் ஓவரா பண்றாரு... நடவடிக்கை எடுங்க’ - ஆளுநரிடம் முறையிட்ட சந்திரபாபு நாயுடு