ETV Bharat / bharat

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் கோவில்- சிக்கல் தீருமா ? - தர்பார் சாகிப் குருத்வாரா

சண்டிகர்: பாகிஸ்தானின் எல்லைக்குள் அமைந்திருக்கும் சீக்கியர்களின் கோயிலுக்கு செல்லும் சாலை அமைப்பதில் இந்திய-பாகிஸ்தான் இடையே சிக்கல் நிலவுகிறது.

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் கோவில்- சிக்கல் தீருமா ?
author img

By

Published : Apr 17, 2019, 12:03 PM IST

சீக்கியர்களின் முக்கிய ஆன்மீக தளங்களில் ஒன்று தர்பார் சாகிப் குருத்வாரா. இது பஞ்சாப் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானின் கர்தாபூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இங்குதான் குருநானக் தன் கடைசி காலத்தைக் கழித்ததாகவும், அவர் இறந்த இடத்தில்தான் தற்போது இந்த குருத்வாரா கட்டப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

இதனால் இந்த இடம் சீக்கியர்களுக்கு தர்பார் சாகிப் குருத்வாரா மிக முக்கியமான திருத்தலமாகக் கருதப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கோட்டிலிருந்து வெறும் 3 கீ.மீ. தொலைவில் பாகிஸ்தான் எல்லைக்குள் அமைந்திருக்கிறது குருத்வாரா. இந்த குருத்வாராவை தற்போதுவரை இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் எல்லையில் நின்று தொலைநோக்கி வழியாக பார்த்து வழிபடும் நிலை இருந்துவருகிறது.

தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாஞ்சாப்புக்கும் குருத்வாராவுக்கும் இணைப்பு சாலை அமைக்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பணிகள் துரிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அதிகாரிகளும், இந்திய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், எல்லை பாதுகாப்பு அதிகாரிகளும் நேற்று சந்தித்துக்கொண்டனர். சுமார் நான்கு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது சாலை கட்டுமானப் பணிகள் பற்றி ஆலோசித்தனர். இந்த முதல் கட்ட சந்திப்பு சீக்கியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/bharat/bharat-news/kartarpur-sahib-corridor-india-pak-discuss-technical-issues-1-1-1-1/na20190416231627480

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.