கர்நாடாக மாநில சிறு நீர்ப்பாசன மற்றும் சட்ட அமைச்சர் ஜே.சி. மது சுவாமி கோலர் அருகேயுள்ள ஒரு ஏரியை ஆய்வு செய்ய சென்றார். அப்போது, அவரிடம் அந்தக் கிராமத்திலுள்ள பிரச்னைகளையும், ஏரியை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அமைச்சரிடம் முறையிட்டபடி அமைச்சரின் அருகில் சென்றிருக்கிறார்.
அப்போது, அவர்களுக்கு வணக்கத்தை சொல்லிவிட்டு அவர்களை அப்புறப்படுத்த அங்கிருந்த காவலர்களிடம் அமைச்சர் கூறுகிறார். தொடர்ந்து அப்பெண் அமைச்சரை நோக்கி கேள்வியெழுப்ப, ஒருகட்டத்தில் நிதானம் இழந்த அமைச்சர், அந்தப் பெண்ணை மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார். மேலும், அந்தப் பெண்ணை நோக்கி மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
"ஊரடங்கு காலத்தில் அமைச்சர் இப்பகுதிக்கு வந்து மக்களின் குறைகளை கேட்கவில்லை. அதனால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவரிடம் குறைகளை முறையிட முயற்சித்தேன். ஆனால், அவர் மரியாதைக் குறைவான வார்த்தைகளை என் மீது பிரயோகித்தார்" என அச்சம்பவம் குறித்து அப்பெண்மணி பேசியுள்ளார்.
இதையும் படிங்க: ’பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும்’ - வெங்கையா நாயுடு