ETV Bharat / bharat

கர்நாடகாவிலிருந்து 1,000 செவிலியர்களை பிரிட்டன் அனுப்ப திட்டம்! - ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் இந்திய செவிலியர்களுக்கு பெரும் தேவை

கர்நாடகாவிலிருந்து 1,000 செவிலியர்கள் பணிக்காக பிரிட்டன் செல்ல உள்ளனர்.

1 000 skilled nurses send to Britain nurses send to Britain International Immigration Center 1,000 செவிலியர்களை பிரிட்டன் அனுப்ப திட்டம் பிரிட்டன் செல்லும் செவிலியர்கள் அஸ்வதா நாராயணா ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் இந்திய செவிலியர்களுக்கு பெரும் தேவை இந்திய செவிலியர்களுக்கு பெரும் தேவை

author img

By

Published : Jan 1, 2021, 10:20 AM IST

பெங்களூரு: கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் வேலை தேடுபவர்களிடையே நம்பிக்கையை உருவாக்கும் முயற்சியில், தொழில் ரீதியாக பயிற்சி பெற்ற 1,000 செவிலியர்களை பிரிட்டனுக்கு அனுப்ப கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து மாநில துணை முதலமைச்சர் டாக்டர் சி.என். அஸ்வதா நாராயணா கூறுகையில், “ ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் இந்திய செவிலியர்களுக்கு பெரும் தேவை இருக்கிறது.

அங்கு அமைந்துள்ள பல மருத்துவமனைகள் வேலைவாய்ப்பு வழங்க முன்வந்துள்ளன. முதல் கட்டத்தில் 1,000 செவிலியர்கள் பிரிட்டனுக்கு அனுப்பப்படுவார்கள்.

இந்த செவிலியர்களுக்கு கர்நாடக தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் தகவல் தொடர்பு திறன் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.

இது குறித்து வெளியான அறிக்கையில், “பிரிட்டன் அரசு வேலைவாய்ப்பை பெறுபவர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.20 லட்சம் (இந்திய மதிப்பில்) வழங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனாவிற்கு போராடிய செவிலியர்கள் நிரந்தர பணிக்கு போராடுகின்றனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.