MekedatuProject: 1924ஆம் ஆண்டு மெட்ராஸ் - மைசூர் மாகாணங்களுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, காவிரியில் அணை கட்ட வேண்டுமென்றால் இரு மாகாண அரசுகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதையடுத்து அமைக்கப்பட்ட காவிரி நடுவர் நீதிமன்றமும் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கியது.
ஆனால், அதனைக் கண்டுகொள்ளாத கர்நாடக அரசு மேக தாதுவில் அணை கட்டும் பணிக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அணைகட்டும் பணியில் தீவிர ஈடுபாடு கொண்டது.
இந்நிலையில், கர்நாடக அரசின் சார்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கடந்த 4ஆம் தேதி ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு காவிரியால் பயனடையும் தமிழ்நாட்டின் கருத்தோ, ஒப்புதலோ தேவையில்லை என தெரிவித்துள்ளது.
மேலும், மேகதாதுவில் அணைக் கட்டுவதால் காவிரி வனப்பகுதியான 4 ஆயிரத்து 996 ஹெக்டர் நிலப்பரப்பு நீரில் மூழ்கும். தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட நீரினை வழங்கவும் மேகதாது அணை அவசியமாகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: மேகதாதுவில் தடுப்பு அணை... கர்நாடகம் முனைப்புடன் செயல்படுகிறது: வைகோ!