பெங்களூருவில் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி நடந்த கலவரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு (CCB) அக்.12ஆம் தேதியன்று முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்தது. 850 பக்கமுள்ள இந்தக் குற்றப்பத்திரிகையில், 52 பேரை குற்றஞ்சாட்டி பெயரை குறிப்பிட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்டோர் நேரில் கண்ட சாட்சிகளின் அறிக்கைகள் உள்ளன.
இதில், முன்னாள் மேயர் சம்பத் ராஜ், காங்கிரஸ் கட்சியின் ஜாகிர் உசேன் ஆகியோரை குற்றஞ்சாட்டி, மத்திய குற்றப்பிரிவு அவர்களது பெயர்களை இட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரசின் டி.கே. சிவக்குமார் கூறுகையில், "இது பாஜக அரசின் திட்டமிட்ட சதி. அவர்களது தோல்வியை மறைக்க எங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். இந்தக் குற்றத்தை நாங்கள் ஏற்கமாட்டோம். உண்மையை நிலைநாட்ட சட்டரீதியாகப் போராடுவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை: நிலைமையை கண்காணிக்கும் மத்திய அரசு!