கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 15 பேர், தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதை சபாநாயகர் ஏற்க மறுத்த நிலையில், அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 15 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, சட்டப்பேரவை முடிவில் தலையிட முடியாது என்றும், அதிருப்தி எம்எல்ஏ-க்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கே வலியுறுத்தக் கூடாது எனவும் தீர்ப்பு அளித்தது.
இந்த பரப்பரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசுக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்தால் மட்டுமே குமாரசாமி முதலமைச்சராக நீடிப்பார் எனவும், இல்லையென்றால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை கைப்பற்றும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.