கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி தொடர்ந்து நீடிக்குமா என்ற அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களின் கூட்டம் அம்மாநில சட்டபேரவை வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பேசுகையில், எக்காரணம் கொண்டும் இந்த கூட்டணி ஆட்சி கலையாது. இந்த அரசியல் குழப்பத்திற்கு காரணம் பாஜக தான் எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா வீட்டில் பாஜக தலைவர்கள் முகாமிட்டுள்ளனர்.
மற்றொரு பக்கம் கர்நாடாக முதலமைச்சர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து பேசி வருகிறார்.