ETV Bharat / bharat

கார்கில் வெற்றி தினம்: நினைவிடத்தில் முதலமைச்சர், ஆளுநர் மரியாதை! - Chief Minister Narayanasamy

புதுச்சேரி: கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு கார்கில் நினைவிடத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் ஆளுநர் கிரண்பேடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

கார்கில் வெற்றி தினம்
கார்கில் வெற்றி தினம்
author img

By

Published : Jul 26, 2020, 1:50 PM IST

1999ஆம் ஆண்டு காஷ்மீரின் கார்கில் பகுதியை ஆக்கிரமித்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவத்தினர் போர் நடத்தினர். போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற அப்போரில் நாட்டுக்காக தங்களது உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவுகூரும் வீதமாக ஒவ்வொறு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தினத்தையொட்டியும், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள கார்கில் நினைவிடத்தில் இன்று (ஜூலை 26) முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கார்கில் வெற்றி தினம்

இதில், முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: கார்கில் போரின் வானிலை மற்றும் நிலப்பரப்பு சவால்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.