கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மத்தியப் பிரதேசத்தில் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, பாஜகவைச் சேர்ந்த சிவராஜ் சிங் முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆட்சி கவிழ்வதற்கு முக்கியக் காரணமான காங்கிரஸ் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி தருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சரவை அமைக்காமலேயே அங்கு பாஜக ஆட்சி நடத்திவருகிறது. பேரிடர் காலத்தில், அரசியல் காரணங்களுக்காக அமைச்சரவை அமைக்காததைக் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது.
இதனிடையே, அரசியலமைப்புக்கு எதிராக மத்தியப் பிரதேச அரசு செயல்படுவதாகவும் அமைச்சரவையை அமைக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் குடியரசுத் தலைலர் ராம்நாத் கோவிந்துக்கு காங்கிரஸ் மூத்தத் தலைவரும் வழக்குரைஞருமான கபில் சிபல் கடிதம் எழுதியுள்ளார்.
பொதுவாக தேர்தல் வர சில மாதங்களே இருக்கும்போது அல்லது வேறு சில காரணங்களுக்காக அரசால் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யமுடியாமல் போகும்போது கஜானாவில் உள்ள நிதியை செலவுசெய்யும் அதிகாரத்தை அரசு பெற vote of count தாக்கல்செய்யப்படும்.
எனவே, vote of count-ஐ மாநில அரசு இயற்ற வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கைவிடுத்துள்ளது. தவறினால், குடியரசுத் தலைவர் ஆட்சியை மாநிலத்தில் அமல்படுத்த மாநில ஆளுநரிடம் முறையிடுவோம் என அக்கட்சி சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பால்கர் வன்முறைச் சம்பவத்தை அரசியலாக்கும் பாஜக - காங்கிரஸ் குற்றச்சாட்டு