ETV Bharat / bharat

கான்பூர் என்கவுன்டர் : யோகி அரசை சரமாரியாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்

லக்னோ: உத்தரப் பிரதேச என்கவுன்டரில் எட்டு காவல் துறையினர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

UP
UP
author img

By

Published : Jul 3, 2020, 2:07 PM IST

Updated : Jul 4, 2020, 10:49 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரின் உள்ளூர் ரௌடியான விகாஸ் தூபே என்பவரை காவல் துறையினர் கைது செய்ய சென்றனர். அப்போது விகாஸ் துபேவின் ஆள்கள் காவல் துறையினர் மீது நடத்திய தாக்குதலில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட எட்டு காவலர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

காவல் துறையினர் மீது நடத்தப்பட்ட இந்த கொலைவெறித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், யோகி அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர்:

”உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் குண்டர்கள் ஆட்சிக்கு இந்தச் சம்பவம் மேலும் ஒரு உதாரணம். காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாதபோது மக்களின் கதி என்ன?” என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்:

உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாகியுள்ளது. குற்றவாளிகள் எந்த அச்சமும் இன்றி செயல்படுகின்றனர்.

  • कानपुर की भयावह घटना की खबर आई ही थी कि प्रयागराज में एक परिवार के चार लोगों की हत्या कर दी गई। गाजियाबाद में पिता-पुत्री की हत्या कर दी गई।

    उप्र में अपराधियों का इस तरह हावी हो जाना असामान्य है। इस #जंगलराज को देखते हुए जवाबदेही तो फिक्स करनी ही होगी।https://t.co/GYt6FmEDkK

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) July 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பொது மக்கள் தொடங்கி காவல் துறையினர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கின் கட்டுப்பாடு முதலமைச்சரின் வசமுள்ள நிலையில், அவர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர்:

உத்தரப் பிரதேச அரசுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே உள்ள ரகசியக் கூட்டணியே இந்த அவமானத்திற்குரிய சம்பவத்திற்கு காரணம். குற்றவாளிகளை விரைந்து பிடித்து அவர்களுக்கு உரிய தண்டனையை அரசு வழங்க வேண்டும்.

  • उप्र की भाजपा सरकार अपनी पोलपट्टी खुलने के डर से आनन-फ़ानन में मुख्य अपराधी को न पकड़कर छोटी-मोटी मुठभेड़ दिखाने का नाटक करवा रही है. इससे पुलिसकर्मियों का मनोबल और गिरेगा तथा पुलिस का आक्रोश भी बढ़ेगा.

    सरकार तुरंत मुआवज़ा घोषित करे व परिजनों को हर संभव संरक्षण दे.

    निंदनीय!

    — Akhilesh Yadav (@yadavakhilesh) July 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: லடாக் எல்லைப் பகுதிக்கு பிரதமர் மோடி திடீர் பயணம்

Last Updated : Jul 4, 2020, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.