இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய கிராம பஞ்சாயத்து தலைவர் சுனீல் பெங்காய், "உஜ்வாலா திட்டத்தின் கீழ் 545 குடும்பங்களுக்கு எல்பிஜி வாயுவை வழங்கியுள்ளோம். இலவசமாக கிராம பஞ்சாயத்து பகுதியில் உள்ள 80 குடும்பங்களுக்கு எரிவாயு வழங்கியிருக்கிறோம். 100 முதல் 120 வீடுகளுக்கு சோலார், கிராமங்களின் முக்கிய பகுதிகளில் விளக்குகள், கான்கிரீட் சாலைகள் நிறுவுதல், அத்துடன் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு இலவசமாக இரண்டாயிரம் மறுபயன்பாட்டு முகக் கவசத்தை வழங்கியுள்ளோம்.
அரசாங்கத்திடமிருந்து வரும் அனைத்து வசதிகளையும் பொதுமக்களுக்கு வழங்குவதற்கான ஒரு நோக்கம் எங்களுக்கு இருந்தது. மேலும் எங்கள் கிராம பஞ்சாயத்தை மேம்படுத்த முயற்சித்தோம். கிராம பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளையும் எரிவாயுக்கு மாற்ற முடிவுசெய்தோம். இதனையடுத்து உஜ்வாலா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கு எல்பிஜி வாயுவை வழங்கினோம்” என்று தெரிவித்தார்.