மகாராஷ்டிரா குறித்து கங்கனா ரணாவத் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்டால், நான் அவரிடம் மன்னிப்பு கேட்பது குறித்து யோசிப்பேன் என சஞ்சய் ரவாத் தெரிவித்துள்ளார். மும்பை குட்டி பாகிஸ்தான் என குறிப்பிடும் அவருக்கு, அகமதாபாத்தை அதுபோல் குறிப்பிட தைரியம் உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், மும்பை காவல்துறை மீது நம்பிக்கை இல்லையென்றால் மும்பை வராதீர்கள் என சஞ்சய் ரவாத் மிரட்டல் விடுப்பதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு போல் மும்பை இருக்கிறது எனவும் தெரிவித்திருந்தார்.
"சுஷாந்த் சிங் மரணத்திற்குப் பின்பு போதை மற்றும் ஊடக மாஃபியா குறித்து நான் பேசினேன். சுஷாந்த் சிங்கின் புகார்களை மும்பை காவல்துறை நிராகரித்ததால் மும்பை காவல்துறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. மும்பை காவல்துறை அனைவரையும் கொலை செய்யும் என சுஷாந்த் கூறினார். ஆனால், அவர் கொல்லப்பட்டார். நான் பாதுகாப்பின்மையை உணர்வதால் சினிமா துறையையும், மும்பையையும் வெறுக்கிறேன் என்று அர்த்தமா?" என கங்கனா மற்றொரு ட்வீட்டில் கூறியிருந்தார்.
"கங்கனாவுக்கு மும்பை நிறைய கொடுத்துள்ளது. ஆனால், அவர் தற்போது மும்பையையும், மும்பை காவல்துறையையும் அவமானப்படுத்தி வருகிறார்" என சிவசேனா எம்பி சஞ்சய் ரவாத் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவின் பெருமைக்கு களங்கம் கற்பிக்கிறார்” - கடும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் கங்கனா