ETV Bharat / bharat

சன்னி லியோன் குறித்துப் பேசி போலி பெண்ணியவாதிகளை சாடிய கங்கனா! - சன்னி லியோனை ட்வீட்டில் இழுத்த கங்கனா

மும்பை : நடிகைகள் கங்கனா ரனாவத், ஊர்மிளா இடையே சமூக வலைதளத்தில் மோதல் முற்றிய நிலையில், போலி பெண்ணியவாதிகளை சாடி கங்கனா ரனாவத் ட்வீட் செய்துள்ளார்.

kang
kang
author img

By

Published : Sep 17, 2020, 8:47 PM IST

Updated : Sep 17, 2020, 9:11 PM IST

பாலிவுட்டில் போதைப் பொருள் புழக்கம் அனைத்து பார்ட்டிகளிலும் தாராளமாக இருப்பதாகவும், பிரதமரின் ’தூய்மை இந்தியா’ திட்டம் போல் பாலிவுட்டில் உள்ள இந்த போதைப்பொருள் பழக்கம் எனும் சாக்கடையை ஒழிக்க வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த நடிகை ஊர்மிளா, ”முதலில் உங்கள் ஊரில் இருக்கும் போதை மருந்துப் பிரச்சினையை ஒழித்துவிட்டு, பிறகு வந்து பாலிவுட்டைப் பற்றிப் பேசுங்கள்” எனப் பதிவிட்டிருந்தார். இரண்டு பாலிவுட் திரைப்பிரபலங்கள் இடையில் சமூகவலைதளத்தில் அரங்கேறிய இந்தக் காரசாரமான விவாதம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கங்கனா, "நடிகை ஊர்மிளா என்னைப் பற்றி மிகவும் அவதூறான கருத்துகளை தெரிவித்திருப்பதைக் கண்டேன். ஊர்மிளா எனது போராட்டங்களை நகைப்புக்குரியதாக்குகிறார். மேலும், அவர் ஒரு ’அடல்ட்’ பட நடிகை" எனத் தெரிவித்தார்.

கங்கனாவின் இந்தப் பேச்சு பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஊர்மிளாவிற்கு ஆதரவாக பாலிவுட் கலைஞர்கள் பலரும் ட்விட்டரில் தற்போது பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், "லிபரல் கொள்கைகளைப் பேசுபவர்கள், சமீபத்தில் நடிகை சன்னி லியோன் குறித்து கருத்து தெரிவித்த மூத்த எழுத்தாளர் ஒருவர்மீது தாக்குதல் நடத்தினர். ”சன்னி லியோன் போன்றவர்களை நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது” என்று அவர் கூறியதைக் காரணம் காட்டி அவர் மீது இந்தத் தாக்குதல் நடைபெற்றது.

சன்னி லியோனை ஒரு திரைக்கலைஞராக ஒட்டு மொத்த நாடும் ஏற்றுக்கொண்டது. ஆனால் அவரை ’பார்ன் ஸ்டார்’ எனக் குறிப்பிட்டதை ஏதோ அவமதிப்பு போல ’போலி பெண்ணியம் பேசுபவர்கள்’ கட்டமைக்கின்றனர்" எனப் பதிவிட்டுள்ளார்.

  • Liberal brigade once virtually lynched a renowned writer in to silence for saying people like Sunny Leone should not be our role models, Sunny is accepted by the industry and entire India as an artist, suddenly fake feminists equating being a porn star to something derogatory 🙂

    — Kangana Ranaut (@KanganaTeam) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

Last Updated : Sep 17, 2020, 9:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.