கர்நாடாகவின் வீர விளையாட்டான கம்பளாவில் ஸ்ரீனிவாச கவுடா என்ற கட்டட தொழிலாளி, சேற்றில் காளைகளை விரட்டியவாறு மின்னல் வேகத்தில் ஓடிய சம்பவம் அனைவரும் வியக்க வைத்தது..
144 மீட்டர் தூரத்தை வெறும் 13.62 வினாடிகளில் இவர் ஓடிக்கடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின. உலகின் மிக வேகமான ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டுக்கு நிகராக நெட்டிசன்கள் இவரை ஒப்பிட்டுப் பேசினர்.
கவுடாவை இந்திய தடகள சம்மேளனத்தில் சேர்த்துக்கொண்டு பயிற்சி அளிக்குமாறு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு-வுக்கு ட்வீட் செய்திருந்தனர்.
இதனையடுத்து விளையாட்டுத் துறை அமைச்சரும், ஸ்ரீனிவாச கவுடா-வை அழைத்துவந்து, அவரது வேகத்தை சோதனையிடுமாறு இந்திய விளையாட்டு மேம்பாடு ஆணைய (SAI) அலுவலர்களுக்கு உத்தரவிட்டர்.
அதன்படி, பெங்களூருவில் ஸ்ரீனிவாச கவுடாவை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவர்கள் சந்தித்துப் பேசினார். அப்போது, தன்னைச் சோதனையிட வேண்டாம் என கவுடா மறுப்பு தெரிவித்துவிட்டதாக அலுலர்கள் கூறினர்.
இதுகுறித்து அலுவலர்கள் பேசுகையில், "(கர்நாடக) முதலமைச்சரைப் பார்ப்பதற்காக அவர் (கவுடா) பெங்களூருக்கு வந்துள்ளார். கவுடாவை சந்தித்துப் பேச SAI குழுவினர் முதலமைச்சர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறோம்.
ஆனால் அவருக்கு ஆர்வலம் இல்லை போல. அவருக்கு ஏதோ காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிந்துகொண்டோம்" என்றார்.
இதையும் படிங்க : சரித்திரத்தில் முதல்முறையாக கால்பந்தாட்ட வீரர் கையில் லாரஸ் விருது!