புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட கடந்த 30ஆம் தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் உள்ளிட்ட 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #HBDSivajiGanesan - 'இன்பச் சக்கரம் சுற்றுதடா, அதில் நான் சக்கரவர்த்தியடா'!