நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (நவ.18) தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் குடியுரிமைத் திருத்த மசோதாவை கொண்டுவருவதில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு (என்.டி.ஏ.) உறுதியாக உள்ளது.
இதனை கொண்டுவருவதால் வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும். இந்த திட்டத்துக்கு அந்த பிராந்தியத்தில் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மணிப்பூர், அசாம், மேகாலயா மற்றும் திரிபுராவில் உள்ள பெரும்பாலான முக்கிய ஆயுத கிளர்ச்சி அமைப்புகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. இதனால் தற்போது அமைதி நிலவி வருகிறது. இதனால் கலாச்சார உறவுகளை உருவாக்கி வணிக வளர்ச்சியை ஏற்படுத்தவும் அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.
தற்போதைய குடியுரிமைச் சட்டம் இதற்கு எதிரானது. ஏனெனில் அது மதத்தின் அடிப்படையில் வேறுபடுகிறது. இது நிச்சயம் மதசார்பற்ற மதிப்புகளை நிலைநிறுத்தாது.
அசாமின் முன்னணி சமூக - அரசியல் ஆய்வாளரான மயூர் போரா-வின் கருத்தும் இதுதான். குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்ற விரும்பினால், தாராளமாக செய்யுங்கள். ஆனால் அதற்கு முன்னர் அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.
இது புள்ளி விவரம் சம்மந்தப்பட்ட விஷயம். அமைதியின்மைக்கு நிறைய சாத்தியங்களை கொண்டுள்ளது என்பது பல்வேறு எழுத்தாளர்களின் நிலைப்பாடாக உள்ளது. குடியுரிமைச் சட்டம் 1955ஆம் ஆண்டு திருத்தத்தின் அடிப்படையில் முன்மொழிகிறது.
கடந்த காலங்களில், குடியுரிமைச் சட்டம் 1986, 1992, 2003, 2005 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்டது. இந்த மசோதா மூன்று நாடுகளைச் சேர்ந்த (ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான்) 6 மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு (இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள்) குடியுரிமைக்கான விண்ணப்பத்திற்கு முன்னதாக உடனடியாக 12 மாதங்களாவது இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். 12 மாதங்கள் வசிந்திருந்தால் கூட அவர்களுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்பட்டுவிடும்.
இதுமட்டுமின்றி குடியுரிமை திருத்த மசோதா, பிராந்தியத்திலுள்ள பழங்குடிமக்களாலும் எதிர்க்கப்படுகிறது. இது பழங்குடியினரின் உயிர்வாழ்வைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இது மேலும் சிக்கல்களை உருவாக்கும் என்று முன்னணி வழக்கறிஞரான பிஷ்வாஜித் சபமும் கூறுகிறார்.
மக்களின் அரசியல் மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசியலமைப்பு மாற்றங்களின் அவசர தேவை உள்ளது என்பதும் அவர் கருத்தாக உள்ளது.
ஏழு மாநிலங்களை உள்ளடக்கிய வடகிழக்கு என்பது ஒரு வித்தியாசமான பிராந்தியம். இன, கலாச்சார, நடத்தை, நம்பிக்கை மற்றும் மதிப்பு அமைப்புகள் என பல விஷயங்கள் அவர்களுக்கு தனித்தனியே உள்ளன. அவை பிரதான நிலப்பகுதியிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றன.
நாகாக்கள் மற்றும் பிற பழங்குடியினரின் வாழ்க்கை முறைகள் அல்லது அசாமி மற்றும் மணிப்பூர் மக்களும் ஒரு தனித்துவமான வரலாறு உண்டு.
பூவியியல் ரீதியாக 22 கி.மீ நீளமுள்ள நிலப்பரப்பை "கோழியின் கழுத்து" என்று அழைப்பார்கள் (அந்த பகுதியின் நிலப்பரப்பு அவ்வாறு இருக்கும்). அதன் எல்லையின் எஞ்சிய பகுதிகள் பூட்டான், சீனா, மியான்மர் மற்றும் வங்கதேசத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
உயரமான மலைகளிலிருந்து அதன் வடக்கே இந்த குறுகிய நிலப்பரப்பின் பாதிப்பைப் பாதுகாப்பதற்காகவே, 2017ஆம் ஆண்டு டோக்லாம் மோதலின் போது இந்திய வீரர்கள் 73 நாட்கள் சீனர்களிடம் எதிர்த்து நின்றனர். ஆங்கிலேய ஆட்சி நவீன வாழ்க்கை, கல்வி மற்றும் மேற்கத்திய மரபுகளுக்கான அவர்களின் நகர்வை எளிதாக்கியதுடன், பிராந்தியத்தின் பழங்குடியின மக்களிடையே மோதல்களின் மரபுகளையும் இது வளர்த்தது.
எனவே, இதுபோன்ற பின்னணியில், பல பகுதிகள் ஒரு தனி அடையாள கருத்தின் அடிப்படையில் வன்முறை இயக்கங்களைக் உருவாக்கின. இதன் விளைவாக, அசாம், மணிப்பூர், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகியவை கிளர்ச்சி இயக்கங்களைக் கண்டன.
அவற்றில் நாகா உலகின் இரண்டாவது மிக நீண்ட கால கிளர்ச்சி இயக்கமாகும். இவ்விவகாரம் குறித்து நாகா எழுத்தாளர் தெம்சுலா ஓ (Temsula Ao) கூறும்போது, “குடியுரிமை திருத்த மசோதாவிற்கு பின்னால் உள்ள உந்துதல் சந்தேகத்திற்குரியது. வடகிழக்கு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதைக் காட்டுகிறது.” என்கிறார். பல காலங்கள் அமைதியை கண்ட நாகாலாந்து, அதே அமைதியில் தொடர வேண்டும் என்பதே அவர் மட்டுமல்ல அனைவரின் விருப்பமும்.!
கட்டுரையாளர் சஞ்சிப் கே.ஆர் பருவா, டெல்லி.!
இதையும் படிங்க: நாகா ஒப்பந்தம்: பிரதமரை சந்திக்க காங்கிரஸ் குழு திட்டம்
நாகாலாந்து அமைதி ஒப்பந்தம் குறித்து அசாம் முதலமைச்சர் கருத்து!