கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி தீபாங்கர் தத்தா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பிஸ்வநாத் சோமந்தர் ஆகிய இருவரும் சமீபத்தில் குடியரசுத் தலைவரால் மும்பை, மேகாலயா ஆகிய உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
இதனிடையே கரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில், விமானம் ஆகியவற்றின் போக்குவரத்துகள் முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால் உடனடியாக நீதிமன்றம் செல்வதற்கு இரு தலைமை நீதிபதிகளும் தங்களது குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டுள்ளனர்.
நீதிபதி தீபாங்கர் தத்தா கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கும், நீதிபதி பிஸ்வநாத் சோமந்தர் அலகாபாத்திலிருந்து கொல்கத்தா வழியாக ஷில்லாங்கிற்கும் பயணம் செய்துவருகின்றனர். நீதிபதி பிஸ்வநாத் இன்று மாலையும், நீதிபதி தீபாங்கர் நாளை காலையும் சென்றடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடமையாற்ற இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம்செய்வது பல்வேறு தரப்பினரிடம் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 824ஆக உயர்வு!