இது தொடர்பாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகளாவிய பெருந்தொற்றுநோயான கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொது ஊரடங்கில் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் அன்றாட வாழ்வே ஒட்டுமொத்தமாக சிதைந்திருக்கிறது. அது முன்னோடியில்லாத வகையில், வேலைவாய்ப்பில் ஒரு நெருக்கடியைக் கொண்டு வருகிறது.
இந்தச் சூழலானது 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடியைவிட மோசமானதாக உலகளவில் கருதப்படுகிறது.
எவ்விதமான வருமானத்திற்கும் வழியின்றி நாடு முழுவதும் பெண்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நாடளவில் நிலவி வரும் வேலையின்மையின் விகிதமானது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏப்ரல் மாதத்தில் (பிப்ரவரி மாதத்தில் இது 5.2% ஆக இருந்தது) அதிகரித்து 8.5% ஆக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த பத்தாண்டுகளில் மிக உயர்ந்த வேலையின்மை விகிதமாகும்.
வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மே மாதத்தில் 54.5 மில்லியனாக உயர்ந்திருக்கிறது.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், பணி நீக்கங்கள் சாதாரணமாகி விட்டன.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வின்படி, வேலையின்மை விகிதம் 2020ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் (அக்டோபர் - டிசம்பர்) 9.4% எட்டக்கூடும்.
2008ஆம் ஆண்டில் நிலவிய உலகளாவிய நிதி நெருக்கடியின்போது முதல் மூன்று மாதங்களில் இருந்ததைவிட, தற்போதைய நெருக்கடியானது முதல் மூன்று மாதங்களில் பத்து மடங்கு வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த நெருக்கடியான சூழலில் ஆண்களை விட பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சுயதொழில் செய்பவர்கள் மற்றும் தற்காலிக அல்லது பகுதிநேர ஒப்பந்தங்களில் பணியாற்றி வந்த பெண்கள் வேலை மற்றும் வருமான இழப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.
புதிய வேலைவாய்ப்புகளை விரைவாக உருவாக்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த வேலை நெருக்கடி, ஒரு முழுமையான சமூக நெருக்கடியாக மாறுவதைத் தவிர்க்க, தன்னால் முடிந்த அனைத்தையும் அரசு செய்ய வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டிலும் இந்நிலை தொடரும் என ஆய்வறிக்கை கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.