காக்ராகார், புத்த கயா ஆகிய இடங்களில் ஜமாத்-உல்-முஜாஹிதீன் என்ற வங்கதேச பயங்கரவாத அமைப்பு குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது. இந்த அமைப்பின் முன்னாள் தலைவர் கவுசர் சிறப்புக் காவல் படையால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த அமைப்பின் இந்திய தலைவரான முகமது இஸாஸை கொல்கத்தா சிறப்புக் காவல் படை, பீகார் சிறப்பு காவல் படையின் உதவியோடு, பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவில் வைத்து கைது செய்தது.

ஜமாத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு இந்தியாவின் பல பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியுள்ளது. வெடிகுண்டு தயாரிப்பதில் முகமது இஸாஸ் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது.