ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தபோது, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாரூக் அப்துல்லா ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் மீது அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கேள்விக்கு பதிலளிக்க, பாரூக் அப்துல்லாவை அமலாக்க இயக்குநரகம் அழைத்துள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர்.
அப்துல்லா ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தபோது ரூ.43 கோடி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. வங்கி ஆவணங்களின் அடிப்படையில் இன்று இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி 2019ஆம் ஆண்டில் அமலாக்கத் துறை பாரூக் அப்துல்லாவிடம் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.