ஜம்மு - காஷ்மீர் மாநிலம் காஷ்மீர், லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதையடுத்து, காஷ்மீர் அரசின் பொதுநிர்வாகத்துறை கடந்த வெள்ளிக்கிழமை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.
அந்த சுற்றறிக்கையில் காஷ்மீர் அரசு ஊழியர்கள் இரு யூனியன் பிரதேசங்களில் பணியாற்றுவது குறித்து முன்னுரிமை கோரப்பட்டுள்ளது. அதன்படி ஊழியர்கள் தங்கள் முன்னுரிமைகளைத் தேர்ந்தெடுத்துத் தரவேண்டும்
அதைத்தொடர்ந்து, காஷ்மீர் கவர்னர் இறுதி முடிவெடுப்பார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்களை நியமிக்கும்போது அவர்களின் முன்னுரிமைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமே தவிர அவர்கள் விரும்பிய இடமே ஒதுக்கப்படும் என்று உறுதியளிக்க முடியாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: காஷ்மீரில் திங்கள்கிழமையிலிருந்து தொலைத்தொடர்பு சேவை செயல்படு
ம்