ETV Bharat / bharat

ஜம்முவில் ஒருவர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகள் மீண்டும் அட்டூழியம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்சார்போரா பகுதியில் நேற்றிரவு பயங்கரவாதிகளால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர்
author img

By

Published : Mar 15, 2019, 12:02 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்சார்போரா பகுதியில் நேற்றிரவு நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த 40 வயதுமிக்க ஒருவரை சுட்டு கொன்றனர்.பயங்கரவாதிகள் குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்,

நேற்றிரவு குல்சார்போரா பகுதியில் நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த 40 வயதுமிக்க ஒருவரை கடத்திச் சென்றனர். பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் எனக் கூறினா்.

இதனிடையே பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர், டோங்கிரிபோரா பகுதியைச் சேர்ந்த மன்சூர் அகமத் லோனே என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மன்சூரின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே பயங்கரவாதிகள் நடத்திய இந்த மோசமான தாக்குதல் சம்பவத்தால் குல்சார்போரா பகுதியே பெரும் பதற்றத்துடன் காணப்படுகிறது.

Intro:Body:

https://www.aninews.in/news/national/general-news/j-k-40-year-old-civilian-shot-dead-by-terrorists-in-gulzarpora20190315073512/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.