இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, பல அசத்தலான திட்டங்களை அறிவித்து குறைந்த காலத்திலேயே அதிகப்படியான பயனர்களைக் கவர்ந்தது. இது ஒருபுறம் இருந்தாலும், சேவை குறைபாடு தொடர்பாக பயனர்கள் ஜியோ நிறுவனத்தின் மீது தொடர்ச்சியாகப் புகார் தெரிவித்துவருகின்றனர்.
தற்போது ஜியோ ஃபைபர் பயனர்கள் ஜியோ நிறுவனத்தின் சேவை குறித்து ட்விட்டரில் புகார் தெரிவித்துள்ளனர். இணைய வேகம் மிகவும் மெதுவாக இருப்பதாகவே அதிகமான புகார்கள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ட்விட்டரில் பயனர்கள் தாங்கள் சந்திக்கும் இடையூறுகளைப் புகைப்படமாக எடுத்து ஜியோ வாடிக்கையாளர் சேவை மையத்தை (jio care) டேக் செய்து பதிவிட்டுவருகின்றனர்.
இதுதொடர்பாக ஜியோ தரப்பில், “வட இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களிலுள்ள எங்களது வாடிக்கையாளர்கள் நெட்வொர்க் பிரச்னையைச் சந்தித்திருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம். விரைவில் இப்பிரச்னை சரிசெய்யப்படும். இருப்பினும், இந்தியா முழுவதும் உள்ள மற்ற வாடிக்கையாளர்களுக்குத் தடையின்றி சேவைகள் வழங்கப்படுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டாப் டென்னில் அம்பானி!