ETV Bharat / bharat

’ஜியோவால் இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துள்ளது’

author img

By

Published : May 27, 2020, 4:06 PM IST

டெல்லி: இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங்கை ஊக்குவிப்பதில் ஜியோ 4ஜி தொலைத்தொடர்பு சேவை ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என பன்னாட்டு முதலீட்டார்கள் நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.

'Jio
'Jio

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு முதலீட்டாளர்கள் நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி இந்தியாவின் ஆன்லைன் வணிகம் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கோவிட்-19 பெருந்தொற்றால் சிறு, குறு வணிகங்கள்கூட ஆன்லைன் மூலம் நடைபெறுவதால், ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு ஜியோ 4ஜி தொலைத்தொடர்பு சேவை ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் முறையில் சீனா, அமெரிக்காவைவிட குறைந்த அளவிலேயே இந்தியாவில் உள்ள வணிக நிறுவனங்கள் அமல்படுத்தியுள்ளன.

சீனாவில் 75 விழுக்காடும், அமெரிக்காவில் 70 விழுக்காடும் இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் 30 விழுக்காடு என்ற அளவிலேயே உள்ளது.

2027ஆம் ஆண்டில் இந்தியாவில் இணைய பயனர்கள் எண்ணிக்கை 67 கோடியிலிருந்து 91.4 கோடியாக உயரும் என்றும், ஆன்லைன் மூலம் வணிகம் செய்பவர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 19 கோடியிலிருந்து 59 கோடியாக உயரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக 4ஜி சேவைகள் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரித்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக இணைய வழி பண பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்வது குறைந்த அளவிலேயே உள்ளது.

2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜியோ 4ஜி சேவை தொடங்கப்பட்ட பிறகு, இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு ஜியோ காரணியாக அமைந்துள்ளது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிளிப்கார்ட், அமேசானுக்கு நெருக்கடி கொடுக்க வருகிறது ஜியோமார்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.