திரிபுரா மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்த பெண் தொழிலாளர் ஒருவர் தனது மூன்று வயது ஆண் குழந்தையோடு ஜார்க்கண்ட் மாநிலம், லத்திஹர் மாவட்டத்திலுள்ள கதிமா கிராமத்திக்குக் கடந்த வாரம் திரும்பியுள்ளார். ஆனால், அப்பெண்ணின் கணவரால் ஊர் திரும்ப முடியவில்லை.
அப்பெண்ணின் குழந்தை கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமையன்று பரிதாபமாக உயிரிழந்தது. கணவர் இல்லாத காரணத்தால் அப்பெண் தனது குழந்தையை அடக்கம் செய்ய கிராம மக்களின் உதவியை நாடியுள்ளார். குழந்தை காய்ச்சலால் உயிரிழந்ததால், அதற்கு கரோனா இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் கிராமத்தினர் உதவ முன்வரவில்லை.
அந்தத் தாயின் அவலநிலை குறித்து தகவலறிந்த கதிமா கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் சம்பவம் இடத்திற்கு விரைந்து மருத்துவர்கள் மூலம் அக்குழந்தைக்குக் கரோனா பரிசோதனை செய்ய உதவினார். பின்னர் மாலையில் பரிசோதனை முடிவில் குழந்தைக்கு தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கிராமத் தலைவர் உதவியோடு அக்குழந்தைக்கு இறுதிச்சடங்கு செய்தார்.
இதையும் பாருங்கள்: 'கரோனா காலத்திலும் பணி நியமனத்தில் ஊழலா?'