ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நாளை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, மாநிலத்தில் உள்ள பழங்குடியினருக்கான தனி மத வழிபாடு முறைக்கு அனுமதி வழங்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இந்தத் தீர்மானத்தை மத்திய அரசிற்கு அனுப்ப வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஐந்தாவது ஜார்கண்ட் சட்டப்பேரவையின், நான்காவது சிறப்பு அமர்வு நாளை (நவ 11) நடத்த அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானம் 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பழங்குடியினருக்கான தனி மத வழிபாட்டை பின்பற்றுபவர்களுக்கு ஒரு சிறப்பு பிரிவை ஏற்படுத்தும். தற்போதைய கணக்கெடுப்புகளில் பழங்குடியின மக்கள் அவ்வாறு வகைப்படுத்தப்படாமல் உள்ளதால், இந்தக் கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜார்க்கண்ட் முதலமைச்சர்