இந்தியாவின் எரிசக்தி தேவைக்காக நிலக்கரி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உலகிலேயே நிலக்கரியை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல் உலகிலேயே அதிகமான நிலக்கரி இருப்புகளை வைத்திருக்கக்கூடிய நாடுகள் பட்டியிலில் நான்காவது இடத்தில் உள்ளது.
நாட்டிலுள்ள 41 நிலக்கரி சுரங்கங்களை வணிக சுரங்க நடவடிக்கைகளுக்காக ஏலம் விடும் நடைமுறையை பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரத்தின் தொடக்கத்தில் தொடங்கிவைத்தார். இத்திட்டம் நாட்டின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்யும் எனவும், தற்சார்பு நிலையை இந்தியா அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கரோனா வைரஸ் பெருந்தொற்றால் சரிந்துள்ள பொருளதாரத்தை மீட்டெடுக்க இந்தத் திட்டம் உதவும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், அரசின் இந்த முடிவுக்கு எதிராக ஜார்க்கண்ட் மாநில தலைமை வழக்கறிஞர் ராஜிவ் ரஞ்சன் உச்ச நீதிமன்றத்தல் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "மத்திய அரசு அறிவித்துள்ள நிலக்கரி சுரங்கங்களில் சில ஜார்க்கண்டில் உள்ளன. அரசின் இந்த முடிவு பெருந்தொற்று காலத்தில் பொருளதாரச் சரிவில் உள்ள மாநில அரசுக்கு எவ்வித பயனையும் அளிக்காது.
மாநில அரசுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும். பெரும்பாலான பழங்குடி மக்கள், காடுகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சரியான மதிப்பீடு இல்லை. இதுகுறித்த விரிவான மதிப்பீட்டை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியில் தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்கள் குறைப்பு!