இமாச்சல பிரதேசம் மாநிலம், சிம்லாவில் இருந்து குப்வி பகுதிக்கு சுமார் 16 பேருடன் ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. குப்வி பகுதியில் உள்ள மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுபாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஜீப்பில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.