பிகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகளைக் கொண்ட பிகார் மாநிலத்திற்கு இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
பிகாரில் கட்சிகள் மேற்கொள்ளவிருந்த பரப்புரைகள் கரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டிருந்தன. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பிகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் இன்று பரப்புரையைத் தொடங்கியுள்ளார். இன்று தொடங்கி வரும் ஜூன் 12ஆம் தேதிவரை தொடர்ந்து ஆறு நாள்களுக்கு காணொலி வாயிலாக கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார்.
மாவட்ட அளவிலான கட்சியின் உறுப்பினர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோருடனும் அவர் உரையாற்றுகிறார். இறுதிநாளான ஜூன் 12ஆம் தேதியன்று 38 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதேபோல் பாஜக மூத்தத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா பிகாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றுகிறார்.
இதையும் படிங்க:கர்நாடகாவில் கை கோர்க்கும் பங்காளிகள்? நகம் கடிக்கும் பாஜக!