ETV Bharat / bharat

இந்திய எல்லைப்பகுதியில் ஜவான்கள் தீபாவளி கொண்டாட்டம்! - ஜவான்கள் தீபாவளி கொண்டாட்டம்

ஜம்மு காஷ்மீர்: இந்திய எல்லைப் பகுதியில் ஜவான்கள், ராணுவ பாதுகாப்பு படை வீரர்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு தீபாவளி பண்டிகையில் தீபம் ஏற்றி கொண்டாடினர்.

deepawali
deepawali
author img

By

Published : Nov 14, 2020, 9:07 AM IST

இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி இந்திய எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் தீபம் ஏற்றி கொண்டாடினர். ஜம்மு காஷ்மீர் கட்டுப்பாடு எல்லைக்கோட்டு பகுதி ஆர்எஸ் புராவில் ஜவான்கள் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இதுகுறித்து ராணுவ வீரர்கள் கூறுகையில் , எங்களுக்கு இரண்டு வீடுகள் உள்ளன. ஒன்று எங்களது வீடு, மற்றொன்று இந்திய நாட்டு மக்கள். மக்கள் மகிழ்ச்சியுடன் இந்த தீபாவளியை கொண்டாட வேண்டும். அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவே நாங்கள் வந்துள்ளோம் என்றனர்.

அதேபோன்று இந்திய -வங்கதேச எல்லையில் இருநாட்டு வீரர்களும் இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி கொண்டாடினர். திரிபுரா எல்லையில் வங்கதேச ராணுவ வீரர்கள், இந்திய ராணுவ வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.

மிசோரம் எல்லைப் பகுதியிலும் ராணுவ பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்பு வழங்கி தீபாவளியை கொண்டாடினர்.

இதையும் படிங்க: காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.