சமர்பல் என்னும் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்கத்தாவில் உள்ள தனது குடியிருப்பில் கைது செய்யப்பட்டார்.
வெடி பொருள்களை கையாள்வதில் நிபுணரான சமர்பல், ஜம்மு - காஷ்மீரில் உள்ள தனது முகாமில் வெடிகுண்டு அடங்கிய பார்சல் ஒன்றை வைத்துச் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து குர்விந்தர் சிங் என்னும் இரண்டாம் கட்டளை அலுவலருக்கு இதுகுறித்து தகவல் வந்ததையடுத்து பொட்டலம் குறித்து சந்தேகம் அடைந்த அவர் வெடிகுண்டு அகற்றும் குழுவுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டம், வெடி பொருள்கள் சட்டத்தின் கீழ், சமர்பல் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் சமர்பல் வெடி பொருள்களை கையாள்வதில் நிபுணர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தனது உதவி படைத்தலைவருடன் ஏற்பட்ட பிரச்னையில் அவரை பழிவாங்கும் நோக்கில் வெடிகுண்டு பார்சலை வைத்திருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.
இதையும் படிங்க: அல்வா என்ற சொல் எங்கிருந்தது வந்தது? பாஜகவுக்கு ஓவைசி கேள்வி