சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொவிட்-19 (கொரோனா) வைரஸ் என்ற தொற்றுநோய் வேகமாகப் பரவி வருகிறது. உலகையே மிரட்டி வரும் இந்த நோய் காரணமாக, இதுவரை மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸைத் தடுக்கு உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் சூழலில், ஜப்பான் நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 1001ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில், 706 பேர் ஹோகோஹாமா துறைமுகத்தில் சிறைபிடிக்கப்பட்ட 'டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பலில் பயணித்தவர்கள் ஆவர்.
கொவிட்-19 வைரஸ் காரணமாக அந்நாட்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: ஊழியர்களை ஊதியம் இல்லாத விடுப்பு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தும் எமிரேட்!