பிரதமர் நரேந்திர மோடியின் 69ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் சொந்த ஊரான குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையை இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின் மாலை நர்மதா மாவட்டத்தில் நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து லடாக், ஜம்மு-காஷ்மீர் என்று இருவேறு யூனியன் பிரிதேசங்களாக அறிவித்தது, முன்னாள் முதல் மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் கனவை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்த நாளில் 1948ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரம், முகலாய மன்னர் நிசாம் கட்டுப்பாட்டிலிருந்து நீங்கி இந்தியாவுடன் இணைந்த நாளாகும். அதுவும், வல்லபாய் பட்டேலின் கனவாகும் என்றார்.