ஜம்மு - காஷ்மீர், பாராமுல்லா மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் புதன் கிழமை நடைபெற்ற சோதனையில், சீன துப்பாக்கிகள், எறிகுண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக இந்திய ராணுவம் தகவல் அளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவம், பாராமுல்லா மாவட்டம், ராம்பூர் பிரிவின் ஹத்லங்கா எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் புதன் கிழமை மாலை சோதனை நடத்தினோம். இந்த சோதனையில் ஏகே 47 ரக துப்பாக்கி, 5 சீன துப்பாக்கிகள், 24 எறிகுண்டுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பூஞ்ச் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்!