குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 15ஆம் தேதி இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. பேருந்துகள் எரிக்கப்பட்டன. ஏராளமான மாணவர்கள் காவல் துறையினரால் மூர்க்கமாக தாக்கப்பட்டனர்.
காவல் துறையினரை ஏவி பாஜக தான் கலவரத்தைத் தூண்டியது என டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் கலவரத்தோடு தொடர்புடைய 10 நபர்களைக் காவல் துறையினர் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் யாரும் மாணவர்கள் இல்லை எனவும்; டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் யார் என்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க: பேருந்தை கொளுத்த போலீஸ், மாணவர்களை அடிக்க அடியாட்கள்!