மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக ஜெய்சங்கர் இன்று பூடான் செல்கிறார். அங்கு பூடான் பிரதமர் லோடே ஷெரிங்கைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இது குறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவேஷ் குமார் கூறுகையில், "வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜூன் 7, 8ஆம் தேதிகளில் பூடான் செல்லவுள்ளார். அங்கு இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இடையே இருதரப்பு சந்திப்பு எதுவும் கிடையாது" என தெரிவித்தார்.