பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுறுவ ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நான்கு முறை முயற்சித்துள்ளனர். ஆனால், அந்த முயற்சியை இந்திய பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக முறியடித்த நிலையில், இறுதியாக பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் இந்திய எல்லைக்குள் ஊடுறுவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஊடுறுவலில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய எல்லையில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் சத்யா பால் மாலிக், "பல பாதுகாப்பு விமானங்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் என்வாழ்நாளில் பார்த்ததில்லை" என்றார். முன்னதாக நடத்தப்பட்ட ஊடுறுவல் முயற்சியில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.