ETV Bharat / bharat

பாபாராம் தேவ் மீது வழக்கு - கொரனால்

ஜெய்ப்பூர்: கரோனா வைரஸைக் குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடித்ததாக கூறி, மக்களை ஏமாற்றியதாக பாபா ராம் தேவ், பதஞ்சலி நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

jaipur-fir-against-ramdev-others-for-claiming-to-develop-covid-19-cure

author img

By

Published : Jun 28, 2020, 4:45 PM IST

கடந்த ஜூன் 23ஆம் தேதி யோகா குரு பாபா ராம் தேவ், ஜெய்ப்பூரிலுள்ள பதஞ்சலி நிறுவனத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார். அந்த சந்திப்பில், பதஞ்சலி நிறுவனம் கரோனா வைரஸைக் குணப்படுத்தும் மருந்து ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளது. கொரோனில் எனப் பெயரிடப்பட்ட அந்த மருந்து மூலம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களை மூன்று நாள்களில் குணப்படுத்துவதாக உறுதியளித்தார். இந்த மருந்தினை நிம்ஸ் மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தவர்களுக்குத் தொடர்ந்து ஏழு நாள்கள் கொடுத்து பரிசோதனை செய்தோம். அதில் அனைத்து நோயாளிகளும் பூரண குணமடைந்தனர் எனவும் கூறினார்.

இதையடுத்து, ஆயுஷ் அமைச்சகமும் மத்திய அரசும், மருந்தின் மூலப் பொருள்கள், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் விளக்கம் உள்ளிட்ட பலவற்றிற்கு பதிலளிக்குமாறு பதஞ்சலி நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

மத்திய அரசு ஆய்வு செய்து மருந்து விற்பனைக்கான அனுமதி அளிக்கும் வரை, கொரோனில் குறித்த விளம்பரங்களை நிறுத்தவேண்டும் எனவும் எச்சரித்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர், யோகா குரு பாபா ராம் தேவ், பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சாரிய பாலகிருஷ்ணா, ஜெய்ப்பூர் நிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் பல்பூர் சிங் தோமர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக மக்களிடம் மோசடி செய்து வருவதாகப் புகார் அளித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொடிய தொற்று நோயுடன் போராடி கொண்டிருக்கும் நேரத்தில் பாபா ராம் தேவும், அவருடைய வட்டாரங்களும், மக்களை ஏமாற்றி லாப நோக்கில் செயல்படுகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக கொரோனில் மருந்து குறித்து பேசிய பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சாரியா பாலகிருஷ்ணா ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து மருந்திற்கான ஒப்புதல் பெறுவதற்கு முன் மருந்திற்கான விளம்பரத்தை மேற்கொண்டிருக்கக்கூடாது எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.