ஜெய்ப்பூரில் கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் எட்டு இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 183 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஜெய்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. முன்னதாக இவ்வழக்கில் முகமது சைப், முகமது சா்வார் ஆஷ்மி, முகமது சல்மான், சய்ஃப்பூா் ரஹ்மான் ஆகியோர் குற்றவாளிகள் எனவும் ஷாபாஸ் ஹுசைன் என்பவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறி உத்தரவிட்டது. பின்னர் ஷாபாஸ் ஹுசைன் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் விசாரணை முடிவில் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. குற்றவாளிகளான முகமது சைப், முகமது சா்வார் ஆஷ்மி, முகமது சல்மான், சய்ஃப்பூா் ரஹ்மான் ஆகிய நால்வருக்கும் மரண தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க...அயன் பட பாணியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்: வெளிநாட்டவர் ஒருவர் கைது!